வெளியிடப்பட்ட நேரம்: 14:06 (06/08/2017)

கடைசி தொடர்பு:09:06 (07/08/2017)

சொத்துத் தகராறில் மகள் தீக்குளிப்பு! காப்பாற்றப் போன தந்தையும் பலி!

சொத்துத் தகராறில் தீக்குளித்த மகளைக் காப்பாற்றச் சென்ற தந்தையும் சேர்ந்து இறந்த சம்பவம் மதுராந்தகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தீக்குளிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள அப்துல்கலாம் நகரைச் சேர்ந்தவர் சேகர். இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சில வருடங்களுக்கு முன் மகள் நந்தினியை திருமணம் செய்துகொடுத்துள்ளார். அதன்பிறகு தனது சொத்துகளை இரண்டு மகனுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டார். சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என நந்தினி தந்தையிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த வியாழன் அன்று தந்தையின் கண்முன்னே மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி பற்ற வைத்துக்கொண்டார் நந்தினி. உடனே தீயை அணைக்க ஓடிவந்த சேகர் மீதும் தீப்பற்றிக்கொண்டது. பலத்த தீக்காயங்களுடன் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். பின்பு உயர்சிகிச்சைக்காக இருவரும் சென்னையின் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். சிகிச்சை பலனின்றி நேற்று நந்தினி இறந்துவிட்டார். அந்த சோகம் மறைவதற்குள் இன்று தந்தை சேகரும் இறந்துவிட்டார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க