தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 ஏ தேர்வு! | TNPSC Group-2 A exams in Tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 14:43 (06/08/2017)

கடைசி தொடர்பு:08:54 (07/08/2017)

தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 ஏ தேர்வு!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 ‘ஏ’ தேர்வு நடைபெற்று வருகிறது. நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட 41 பிரிவைச் சேர்ந்த 1953 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் தட்டச்சர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு 7 லட்சத்து 53 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC

அதன் அடிப்படையில் இன்று டி.என்.பி.எஸ்.சி குரூப் 2-’ஏ’ தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தேர்வு மையத்துக்கு செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எந்த எலக்ட்ரானிக் பொருள்களையும் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. குரூப் 2 தேர்வுக்கு நேர்முகத் தேர்வு உண்டு. ஆனால் குரூப் 2 ‘ஏ’ தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறாது. தேர்வில் வெற்றி பெறுபவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர் நேரடியாக பணிக்குச் செல்ல முடியும். குரூப் 2 ‘ஏ’ தேர்வில் கலந்துகொள்ளும் ஆண்களின் விகிதத்தைவிட பெண் தேர்வர்களின் விகிதம் அதிகம். இந்தத் தேர்வு முடிவுகளை இன்னும் மூன்று மாத காலத்தில் டி.என்.பி.எஸ்.சி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க