Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரு அணிகளும் இணைந்து இழந்த சின்னத்தை மீட்போம்..! அமைச்சர் கடம்பூர் ராஜூ

'இரு அணிகளும் இணைந்து, இழந்த சின்னத்தை மீட்டெடுப்போம்' என்று செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், அரசுப் பொருட்காட்சியை செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் கைத்தறி மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் இன்று தொடங்கிவைத்தனர்.

காரைக்குடி மகர்நோன்புப் பொட்டலில், 23 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப் பொருட்காட்சி தொடங்கப்பட்டது. அப்போது, இரண்டு நிமிட காணொளிக்காட்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் கவிஞர் கண்ணதாசன்,  நடிகை மனோரமா, கானாடுகாத்தான் அரண்மனை போன்றவைகள் இடம்பெற்றிருந்தன. அங்கு அமைந்துள்ள கண்ணதாசன் மணிமண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்தனர். அதன்பிறகு, பொருட்காட்சியைத் திறந்துவைத்தார் அமைச்சர் கடம்பூர் ராஜு. 

 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தமிழகம் முழுவதும் நடந்த பொருட்காட்சியால், தமிழக அரசுக்கு 345 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மணல் தட்டுப்பாட்டைப் போக்க, இணையம்மூலம் மணல் விற்பனை, விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டம் போன்ற பல நல்ல திட்டங்களை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்துவருகிறது. திருச்சி விமான நிலையத்தில் கத்தியோடு வந்தவர் சவரத்தொழிலாளி. அவர், பன்னீர்செல்வத்தைப் பார்ப்பதற்காகவே வந்திருக்கிறார். சவரத்தொழிலாளி கத்தி வைத்திருப்பதில் ஆச்சர்யமில்லை. இரு அணிகளும் ஒன்றிணைந்து, இழந்த சின்னத்தை மீட்டெடுப்போம்' என்று தெரிவித்தார். டி.டி.வி.தினகரன்குறித்த கேள்விக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement