Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆர்.எஸ்.எஸ். தொண்டர் கொலை: அருண் ஜெட்லி கண்டனம்!

அருண் ஜேட்லி

'கேரள மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முறையாகப் பராமரிக்கப்படவில்லை' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி குறைகூறியுள்ளார். மேலும், திருவனந்தபுரத்தில்  ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த தொண்டர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் உட்பட அந்த அமைப்பினருக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியினரால் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ராஜேஷின் குடும்பத்தினரை அருண் ஜெட்லி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜேஷின் உடலில் 70 முதல் 80 காயங்கள் இருந்துள்ளது என்றும், எதிரிகள்கூட இப்படி ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை அரங்கேற்றி இருக்க மாட்டார்கள் என்றும் கண்டனம் தெரிவித்தார்.

மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே மத்திய-மாநில அரசுகள் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும், கேரளாவில், கடந்த சில மாதங்களாக வன்முறைச் சம்பவங்கள்தான் அதிகம் நடந்துகொண்டிருக்கின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார். கேரளாவில் இடதுசாரி முன்னணி எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் அரசியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசியல் வன்முறையில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டியது கேரள மாநில அரசின் கடமை என்றும் அருண் ஜேட்லி வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தங்களின் தரப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்திக்குமாறு அருண் ஜெட்லியைக் கேட்டுக்கொண்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement