சென்னை ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

இன்று அதிகாலை முதலே, ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, திங்கட்கிழமை காலையில் வெளியூர் சென்றவர்கள் சென்னை திருப்புவார்கள் என்பதால், அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது இயல்பு. 

சென்னை போக்குவரத்து நெரிசல்

இன்று, பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணியின் சார்பில் மாபெரும் எழுச்சிப் பேரணி நடத்தப்படுகிறது. அதில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து பா.ஜ க-வினர்  வாகனங்களில் சென்னை நோக்கி வந்துகொண்டிருப்பதால், சென்னை ஜி.எஸ்.டி சாலையில் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 
குறிப்பாக, சென்னை குரோம்பேட்டை முதல் பல்லாவரம் வரை வெகுநேரமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள், மெள்ள  ஊர்ந்தவண்ணம் இருகின்றன. இதனால், பொதுமக்களும் அலுவலகம் செல்வோரும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!