Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தடை.... அதை உடை! கட்லின் நடத்திய போராட்டம்

ண்டனில் நடைபெற்று வரும் உலகத் தடகளப் போட்டியில் 'பறக்கும் மனிதர் ' உசேன் போல்ட்டை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றிருக்கிறார் 35 வயது ஜஸ்டீன் கட்லின். 2004-ம் ஆண்டு, ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் அமெரிக்க வீரரான ஜஸ்டீன் கட்லின் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். 2008-ம் ஆண்டில் இருந்து உசேன் போல்ட் வேகமெடுக்க, கட்லின் பின்தங்கினார். 

கட்லினுடன் உ சேன் போல்ட்

தடகள வாழ்க்கையில் இருமுறை தடையைச் சந்தித்தவர் கட்லின்.  2001-ம் ஆண்டு, கட்லினுக்கு இரு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. சிறுவயதில் உடல் வளர்ச்சியில் இருந்த குறைபாட்டுக்காக, Adderall  என்ற மாத்திரை தொடர்ந்து உட்கொண்டு வந்திருக்கிறார். அதில், சர்வதேச தடகளச் சங்கத்தால் தடைசெய்யப்பட்ட 'ஆப்தமைன்' ஊக்க மருந்து அடங்கி இருந்துள்ளது. 

2006-ம் ஆண்டு மீண்டும் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினார். இந்த முறை, ரத்தத்தில் 'ஸ்டீராய்ட் ' கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  கட்லினுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும். அவரின் தடகள வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்றே ரசிகர்கள் கருதினர்.  முடிவில் 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் போராடிய பின், தடை காலம் நான்கு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. 

தடையை சந்தித்தப் பின், மீண்டும் களத்துக்குத் திரும்பி தங்கம் வென்ற இரண்டாவது வீரர் ஜஸ்டீன் கட்லின். ஜமைக்காவைச் சேர்ந்த யோகன் பிளேக் 2009-ம் ஆண்டு ஊக்க மருந்து விவகாரத்தில் தடையைச் சந்தித்தார். பின்னர், லண்டன் மற்றும் ரியோ ஒலிம்பிக்கில் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement