அமைச்சர்கள் விவரம் தெரிந்தேதான் அழிக்கப்பட்டதா? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழக அரசின் அனைத்துத் துறையிலும் ஊழல் நடைபெறுவதாகத் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். மாநிலம் முழுவதும் நடக்கும் ஊழலை அமைச்சர்களின் மின்னஞ்சலில் தெரியப்படுத்துங்கள் என்றும் கூறியிருந்தார். இதன்பின்னர் அரசின் இணையத்திலிருந்து தமிழக அமைச்சர்களின் மின் அஞ்சல் முகவரி, தொலைபேசி எண்கள் முதலியன நீக்கப்பட்டன. 

high court


இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மக்களுக்கு அமைச்சர்களின் மின் அஞ்சல் முகவரிகள் தெரிய வேண்டும், அதை மீண்டும் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, "தமிழக அமைச்சர்கள் குறித்த தகவல்கள் அரசு இணையதளங்களில் இருந்து மென்பொருள் பிரச்னையால் நீக்கப்பட்டதா அல்லது வேண்டும் என்றேதான் நீக்கப்பட்டதா" என தமிழக அரசு வழக்கறிஞருக்கு கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்விக்குப் பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், தமிழக அரசிடம் விளக்கம் பெற்றுக் கூறுவதாக தெரிவித்தார்.  அதன்பின்னர் இந்த வழக்கை வரும் 21-ம் தேதிக்கு மாற்றி வைத்து உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!