ஸ்ரீசாந்துக்கு பிசிசிஐ விதித்த வாழ்நாள் தடையை நீக்கியது கேரள நீதிமன்றம்

ந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ஐ.பி.எல். போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதால் கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட அவருக்கு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது. 2013-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். 2015-ம் ஆண்டு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இல்லையென  ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜீத் சண்டிலா உள்ளிட்ட 36 பேரை விடுவித்தது. 

ஸ்ரீசாந்த்துக்கு தடை நீக்கம்

தற்போது, சினிமாவில் நடித்து வரும் ஸ்ரீசாந்த், தனக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்கக் கோரி மார்ச் மாதத்தில் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஸ்காட்லாந்த்தைச் சேர்ந்த கிரிக்கெட் அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் பி.சி.சி.ஐ தடையில்லா சான்றிதழ் தர மறுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், பாட்டியாலா நீதிமன்றம் விடுவித்த பின்னரும் பி.சி.சி.ஐ தடையை நீக்க மறுப்பதாகவும் கூறியிருந்தார். 

வழக்கை விசாரித்த நீதிபதி ஆஷா, விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்யுமாறு பி.சி.சி.ஐ-க்கு மனு அளிக்குமாறு அறிவுறுத்தினார்.  ஆனால், பி.சி.சி.ஐ  தடையை நீக்க பிடிவாதமாக மறுத்துவிட்டது. இதனால் தடையில்லா சான்றிதழ் பெற முடியாத நிலையில், அவரால் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில், கேரள உயர் நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்டத் தடையை இன்று நீக்கியுள்ளது. 

ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றம் எடுக்கும் முடிவுகள் பி.சி.சி.ஐ மற்றும் அதன் உள்ளமைப்புகள் எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தாது எனவும் ஏற்கெனவே பி.சி.சி.ஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!