8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் ம.தி.மு.க ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ம.தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

mdmk arpattam

கடந்த 2015 - 2016 மற்றும் 2016 - 2017-ம் ஆண்டில் செலுத்திய பயிர்க்காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், விவசாயிகள் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களை உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படாத வறட்சி நிவாரணத்தை வழங்கிட வேண்டும், அந்தந்த கிராமங்களில் வண்டல்மண் எடுத்திட விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்கிடுதல் வேண்டும், கோவில்பட்டியின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க உருவாக்கப்பட்ட 2-வது குடிநீர்த் திட்டப்பணிகளைத் தாமதப்படுத்தாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்,  இளையரசனேந்தல் செல்லும் சுரங்கப்பாதையில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும், கதிரேசன் கோவில் சாலை மற்றும் பூங்கா சாலையை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பிரச்னைகளை நிவர்த்தி செய்யாமல் தொடர்ந்து தாமதப்படுத்தி வரும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் எதிரேயுள்ள பயணியர் விடுதி முன்பு ம.தி.மு.க-வினர் மற்றும் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!