வராகி அம்மனுக்கு யாகம்... ரஜினி அரசியலுக்கு வருவது நிச்சயம்... சென்டிமென்ட் சிக்கலில் ரசிகர்கள்!

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து தொடர்ந்து பேச்சுகள் அடிபட்டு வருகிறது. இதையொட்டி, தஞ்சையில் ரஜினி அரசியலில் குதிக்க யாகம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் அவரது ரசிகர்கள். 

ரஜினி


ரஜினி அரசியல் பிரவேசம் எடுக்கவேண்டுமென தஞ்சை ரஜினி ரசிகர் மன்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

கூட்டத்தில், ஆகஸ்ட் 15-ம் தேதி ரஜினி அரசியலுக்கு வரவேண்டுமெனக் கையெழுத்து இயக்கம் நடத்தி 2 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று ரஜினிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. மேலும், செப்டம்பர் 3-ம் தேதி தஞ்சை பெரியகோயில் வளாகத்தில் உள்ள வராகி அம்மனுக்குச் சிறப்பு யாகம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அன்றைய தினம் 10 ஆயிரம் பேருக்கு அண்ணதானம் வழங்கவும் திட்டமிட்டுள்ளனர் ரஜினி ரசிகர்கள்.

அரசியலுக்கு வருவதற்காக வராகி அம்மனுக்கு 21 சிவாச்சாரியார்கள்  யாகம் நடத்தப்படுவது குறித்து ரஜினி ரசிகர்களிடம் பேசினோம், ''ரஜினி உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, தமிழகத்தில் முதன் முதலாக வராகி அம்மனுக்குத்தான் சிறப்பு யாகம் நடத்தினோம். அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இன்று, அவர் அரசியலுக்கு வரவேண்டுமென எல்லோராலும் விரும்பப்படுகிறது. அதனால், விரைவில் அரசியலுக்கு வரவேண்டுமென வராகி அம்மனுக்கு யாகம் நடத்தவிருக்கிறோம். ஆகஸ்ட் 20-ம் தேதி தமிழருவி மணியன் தலைமையில் திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் பெரும் திரளாகக் கலந்துகொள்ளவும் திட்டமிட்டுள்ளோம்'' என்றனர் மகிழ்ச்சியாக.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!