வெளியிடப்பட்ட நேரம்: 22:45 (07/08/2017)

கடைசி தொடர்பு:08:36 (08/08/2017)

 வைகையில் குப்பைக் கொட்டினால் இனி அபராதம்... உயர் நீதிமன்றம் அதிரடி!

வைகை ஆற்றில் கழிவுநீர் மற்றும் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், தேனி மாவட்டத்திலிருந்து மதுரை வழியாக ஐந்து மாவட்டங்களுக்குச் செல்லும் வைகை ஆறு, அசுத்தமடைந்துள்ளதாகவும் அதை சுத்தம் செய்ய உத்தரவிட வேண்டுமென்றும்  பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் ஏற்கெனவே ஐந்து மாவட்ட ஆட்சியர்களிடம் அறிக்கை கேட்ட உயர் நீதிமன்றம், இன்று மதுரை மாநகராட்சி நிர்வாகத்துக்கு மட்டும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அது மட்டுமல்லாமல், முதற்கட்டமாக மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வைகை ஆற்று பகுதிகளைச் சுத்தம் செய்யவும்  மாநகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. சுத்தம் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து  குழுவமைத்து உயர் நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம் வைகை வழித்தடம் ஓரளவு உயிர்ப்பிக்கப்படவுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க