வெளியிடப்பட்ட நேரம்: 01:40 (08/08/2017)

கடைசி தொடர்பு:07:51 (08/08/2017)

ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையைத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம்!

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் இதுவரை நடந்த நான்கு கட்ட அகழாய்வு தொடர்பான அறிக்கையை தாக்கல்செய்ய செப்டம்பர் 8-ம் தேதி அவகாசம் அளித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

 

muthumakkal thazi

நெல்லை – ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் உள்ள ஆதிச்சநல்லூர் ‘உலக நாகரிகத்தின் தொட்டில்’ என அழைக்கப்படுகிறது. ஹரப்பா, மொகஞ்சதாரோவை ஆய்வுசெய்த வங்க தேசத்து அறிஞரான பானர்ஜியே, இவற்றுக்கு முன்னோடியாக விளங்கிய நாகரிகம் ஆதிச்சநல்லூர் நாகரிகம்தான் என தெரிவித்துள்ளார். மேலும், இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் ‘மெசபடோமியா’ பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகளை ஒத்துள்ளதாகவும் சில ஆய்வுகள் கூறுகிறது.

man thaazi

ஆதிச்சநல்லூரில் கடந்த 2004 பிப்ரவரியில் நடந்த அகழாய்வில் 115 ஏக்கர் பரப்பளவில் பழமையான இடுகாடு அமைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அதிலிருந்து பழங்கால முதுமக்கள் தாழிகள், பழங்காலப் பொருள்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் இதுவரை நடைபெற்ற நான்கு கட்ட அகழாய்வுகள் குறித்து தொல்லியல் துறை அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.  இங்கு கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருள்கள் சென்னையிலும், வெளிநாடுகளிலும் உள்ளன. எனவே, ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தவும், அகழாய்வு அறிக்கையை வெளியிடவும் அறிக்கையின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்து பழங்காலப் பொருள்களை காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல்செய்த பொதுநல மனு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் 4 கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையை ஆகஸ்ட் 7-ம் தேதி தாக்கல் செய்யுமாறு இந்திய தொல்லியல் துறையின் இயக்குநருக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில், மத்திய அரசு வழக்கறிஞர் பதில் அறிக்கை தாக்கல்செய்ய கூடுதல் கால அவகாசம் கோரியதால் இவ் வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து சசிதரன் – சுவாமிநாதன் ஆகிய நீதிபதிகள் அடங்கிய  பெஞ்ச் உத்தரவிட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க