Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாம்பு கடித்தால் இதெல்லாம் செய்யவே கூடாது!

 

 

snake

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பசுமை சங்கம் சார்பில், பாம்புகள் பற்றிய விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் மற்றும் ஐ.எப்.எஸ் அதிகாரி சமார்த்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கல்லூரியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பசுமை சங்க மாணவர்கள் கலந்துகொண்டு, இந்த நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பினர். பாம்புகள் ஆர்வலர் விஸ்வா மற்றும் சகாதேவன் ஆகிய இருவரும் மாணவர்களுக்கு பாம்புகள் பற்றி விளக்கம் அளித்தனர்.

ஏராளமான பாம்புகளின் வகை, அதன் தன்மை பற்றியும் விளக்கினர். குறிப்பாக, பாம்புகள் வராமல் தடுக்க எவ்வாறு சுற்றுச்சூழலை பாதுகாக்க  வேண்டும். பாம்புகள் பற்றிய மூடநம்பிக்கை எப்படி தவிர்க்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறினர் . "ஒரு மனிதனை பாம்பு கடித்தால் பயப்படக் கூடாது. எப்படி முதலுதவி கொடுத்து பின் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்பதைதான் யோசிக்க வேண்டும். மாறாக பயந்தால் மாரடைப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவையே மனிதனைக் கொன்றுவிடும்.  பாம்பு கடித்த பின் மருத்துவமனைக்கு செல்லும்போது ஓடக்கூடாது. அவ்வாறு ஓடினால் விஷம் அனைத்தும் உடலில் உள்ள ரத்தத்தில் கலந்து உயிரிழப்பு ஏற்படும் . சினிமாவில் காட்டுவதுபோல இருக்காது பாம்புகள். அதன் போக்கில் அதை விட்டுவிட்டால் நம்மை எதுவும் செய்யாது. பாம்புகளின் குணாதிசயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பிறரைக் காக்க முடியும். முக்கியமாக பாம்புகளின் இனங்களையும் காக்க முடியும்" என்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement