Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வழிப்பறியில் ஈடுபட்ட 3 போலீஸார் கைது! அதிரடியைத் தொடங்கிய பொன்மாணிக்கவேல்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஓய்வு அறையில் இருந்த  பயணிகளிடமிருந்து வழிப்பறிசெய்ததாக, தமிழ்நாடு சிறப்பு காவலர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டனர். இந்த அதிரடி நடவடிக்கையை ரயில்வே காவல்துறை ஐ.ஜி பொன்மாணிக்கவேல் எடுத்துள்ளார்.

பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், திருடர்கள் வழிப்பறி செய்யாமல் தடுத்திட காவலர்கள்  பணியில் அமர்த்தப்படுவார்கள். நேற்று, வேலியே பயிரை மேய்ந்த கதையாக, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள காவலர்களே வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஓய்வு அறையில் இருந்த பயணிகளிடம் தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவைச் சேர்ந்த காவலர்கள் இருதயராஜ், ராமலிங்கம் மற்றும் அருள்தாஸ்  ஆகிய மூவரும் மிரட்டி பணம் மற்றும் செல்போன்களைப் பறித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பீகாரை சேர்ந்த பயணி பிஸ்வந்த் ரெட்டி, இது சம்பந்தமாகப் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், தற்போது ஐ.ஜி பொன் மாணிக்கவேல் உத்தரவில், அந்த மூன்று காவலர்களும் கைதுசெய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து ரயில்வே காவல்துறையினரிடம் விசாரித்தபோது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழக போலீஸாருடன் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். காவல்களின் தூண்டுதலின் பேரில் ரயில் நிலையத்துக்கு வரும் வடமாநிலத்தவர்களிடம் சோதனை என்ற பெயரில் அவர்களிடம் பணத்தைப் பறிக்கும் செயலில் ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், ஊர்க்காவல் படையினருக்கு பதவி உயர்வு வழங்கியது தமிழக அரசு. அதன்படி அவர்கள் காவலர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் காவலர்களாகிவிட்டதால் ரயில் நிலையத்தில் இருக்கும் காவலர்கள் பயணிகளை மிரட்டி பணத்தைப் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும், அவர்களின் செல்போன்களைப் பறிமுதல் செய்யத் தொடங்கியதால் பயணிகள் ஆத்திரமடைந்து, சில நேரங்களில் தகராறிலும் ஈடுபட்ட சம்பவங்களும் அரங்கேறியது. இந்த நிலையில் ரயில்வே காவல்துறை ஐ.ஜி-யாக பொன்மாணிக்கவேல் அண்மையில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, ரயில் நிலையங்களில் நடக்கும் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கையில் அவர் தீவிரம் காட்டினார். வழக்கம்போல் பயணிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 காவலர்கள் குறித்து பொன்மாணிக்கவேலிடம் புகார் சென்றது. அவரது உத்தரவின்பேரில் மூன்று காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement