வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (08/08/2017)

கடைசி தொடர்பு:11:50 (08/08/2017)

தி.மு.க முன்னாள் அமைச்சர் மகன் கைது..! அமலாக்கத்துறை அதிரடி

தி.மு.க முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் அன்பழகனை அமலாக்கத்துறையினர் கைதுசெய்துள்ளனர். 


நாடு முழுவதும் அமலாக்கத்துறையினர் மற்றும் வருமான வரித்துறையினர் தொடர்ச்சியாக சோதனை நடத்திவருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் தொடர்ச்சியாக வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. அதனால் மத்திய அரசு, அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்துகிறது என்று குற்றச்சாட்டுகளும் எழுந்துவருகின்றன. இந்நிலையில், தி.மு.கவின் மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் அன்பழகனை சென்னையில் வைத்து அமலாக்கத்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். 80 கோடி ரூபாய் அந்நிய செலாவணி மோசடியில் அவர் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கைதான தொழிலதிபர் லியாகத் அலிகான் அளித்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.