சச்சின், ரேகா போன்றவர்களை எம்.பி ஆக்கியது வீண்?

ந்திய அரசியலமைப்புச் சட்டம் 80 (3)  பிரிவு குடியரசுத் தலைவருக்கு  ராஜ்யசபாவில் 12 நியமன உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை அளித்துள்ளது.  தங்கள் துறையில் சிறந்து விளங்கியவர்களைக் கௌரவிக்கும் வகையில், அவர்களுக்கு எம்.பி பதவி வழங்கப்படுகிறது. அந்த வகையில்,  சச்சின், நடிகை ரேகா போன்றவர்களுக்கு எம்.பி பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இவர்கள் இருவரும் நாடாளுமன்றம் பக்கம் எட்டிப் பார்த்ததே இல்லை. கடந்த 2012-ம் ஆண்டு, எம்.பி ஆன சச்சினின் நாடாளுமன்ற வருகைப்பதிவு 6 சதவிகிதம்தான். நாடாளுமன்றத்தில், சச்சின் எந்தக் கேள்வியும் கேட்டதுமில்லை; கோரிக்கை வைத்ததும் இல்லை. 

இரு நாள்களுக்கு முன்,  சச்சின்  நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தபோது, அவரை ட்விட்டரில் கேலியும் கிண்டலும் செய்திருந்தனர். நடிகை ரேகாவின் அட்டென்டன்ஸ், சச்சினைவிட மோசம். இவர், 5 சதவிகித நாள்கள்தான் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருக்கிறார். இவரும் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை.

''இவர்களைப் போன்றவர்களுக்கு எம்.பி பதவி வழங்குவது வீணிலும் வீண் என்றும், இப்படி செய்வதற்குப் பதிலாக பதவியை வேண்டாம் என‘ மறுப்பது சிறப்பானது''  என்று பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது. குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமை அந்த நாளிதழ் பாராட்டியிருக்கிறது. மேரிகோமின் அட்டென்டன்ஸ் 61 சதவிகிதம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!