வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (08/08/2017)

கடைசி தொடர்பு:11:49 (08/08/2017)

கதிராமங்கலம் போராட்டக்காரர்கள் 9 பேருக்கு ஜாமீன்

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில், பொதுமக்கள் தொடர்ந்து ஓ.என்.ஜி.சி-க்கு எதிராகப் போராடிவருகின்றனர்.போராட்டக்காரர்கள் மீது வழக்குப் போடுவதும் கைதுசெய்வதும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 

கதிராமங்கலம்


இந்நிலையில், கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்பது பேர் மீது ஓ.என்.ஜி.சி-க்குச் சொந்தமான பொருள்களைச் சேதப்படுத்தியதாக வழக்குத் தொடரப்பட்டு கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவர்களது ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  சிறையில் இருக்கும் ஒன்பது பேருக்கும் தஞ்சை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இதனால், போராட்டக்காரர்கள் ஒன்பது பேரும் இன்று ஜாமீனில் வெளி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலைசெய்ய வேண்டும்' என்று தொடர்ந்து போராட்டங்கள் நடந்துவந்தன. சிலர், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் இருந்துவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.