Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்துக்கு கொலை மிரட்டல்! உயர் நீதிமன்றத்தில் அதிர்ச்சி தகவல்

sagayam IAS

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடுகளை அம்பலப்படுத்தியவர், ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம். இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல்செய்ய சகாயத்தை நியமித்தது சென்னை உயர் நீதிமன்றம். இதையடுத்து, மதுரையில் விசாரணையைத் தொடங்கினார் சகாயம். இந்த விசாரணையின்போது, சகாயத்துக்கு கிரானைட் நிறுவனத்தில் வேலைசெய்த சேவற்கொடியோன், பார்த்தசாரதி ஆகியோர் உதவி செய்தனர். விசாரணை, சுமார் ஒரு வருடத்துக்கு மேல் நடத்தப்பட்டது. இந்த விசாரணை அறிக்கையை சகாயம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்தார்.

இதனிடையே, சகாயம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவை உயர் நீதிமன்றம் அண்மையில் கலைத்ததோடு, விசாரணை ஆவணங்களைத் தாக்கல்செய்யவும் உத்தரவிட்டது. இதையடுத்து, விசாரணைக் குழுவின் ஆவணங்களைத் தாக்கல்செய்ய அவகாசம் கோரினார் சகாயம். இதைத் தொடர்ந்து, ஒரு மாதம் அவகாசம் அளித்தது உயர் நீதிமன்றம்.

இந்த நிலையில், தனக்கு கொலை மிரட்டல் வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார் சகாயம். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ள மனுவில், தனக்கும் கிரானைட் விசாரணைக்கு உதவிய சேவற்கொடியோனுக்கும் கொலை மிரட்டல் வந்துகொண்டிருக்கிறது. இதனால், தனக்கும் விசாரணைக்கு உதவிய சேவற்கொடியோனுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். விசாரணைக்கு உதவிய பார்த்தசாரதி விபத்தில் இறந்தது பற்றி, உரிய விசாரணை நடத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணையை, செப்டம்பர் 14-ம் தேதிக்கு  உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement