மவுசு இழக்காத தமிழகம்: சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் இந்தியாவில் நம்பர் 1

ரசியல் சர்ச்சைகளில் சிக்கி தமிழ்நாடு மதிப்பிழந்துவிட்டதாகத் தோன்றினாலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது.

சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடம்

2016-ம் ஆண்டு தமிழகத்துக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 47.22 லட்சம். இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில், 19 சதவிகிதம் பேர் தமிழகத்துக்கு வருகைதருகின்றனர். இரண்டாவது இடத்தை மகாராஷ்டிராவும், மூன்றாவது இடத்தை உத்தரப்பிரதேசமும் பெறுகின்றன. 

தென்மாநிலங்களில், கேரளாவுக்கு 10.38 லட்சம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். அதாவது, 4.2 சதவிகிதம். தமிழகத்துக்கும் கேரளாவுக்குமிடையேயான வித்தியாசம், மலைக்கும் மடுவுக்குமானதாக இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்கள், அதிக அளவில் தமிழகத்துக்கு விரும்பி வருகை தருகின்றனர்.  அதேபோல மலேசியா, மொரீஷியஸ், இலங்கை, சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் தமிழகத்துக்கு ஆன்மிகச் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். இதனால், தொடர்ந்து 3-வது ஆண்டாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் முதலிடத்தில் இருக்கிறது, தமிழகம். 

தமிழ்நாட்டுக்கு 3 கோடியே 43 லட்சம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 2016-ம் ஆண்டு வருகைதந்திருக்கின்றனர். இதிலும், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தமிழகம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இரண்டாவது இடத்தை ஆந்திராவும், அடுத்த இடத்தை உத்தரப்பிரதேசமும் பெறுகின்றன. 

இந்தத் தகவலை, மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!