புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்தவருக்கு 3 ஆண்டுக்குப் பிறகு ஜாமீன்!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்தவருக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.

நாராயணசாமி

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடந்த 2014-ம் ஆண்டு மத்திய காங்கிரஸ் அரசில் இணை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, புதுச்சேரி எல்லையம்மன் கோயில் வீதியில் உள்ள அவரது வீட்டில் அவரது காருக்கு அருகே பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தேசிய புலனாய்வு அமைப்பு, தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த திருச்செல்வம், தங்கராசு, தமிழரசன், காளிங்கம், ஜான் மார்ட்டின், கார்த்திக் உள்ளிட்ட ஆறு பேரைக் கைதுசெய்தது. இந்த வழக்கு புதுச்சேரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் ஒருவரான தங்கராசுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!