மீனாட்சி அம்மன் கோயில் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து - அதிர்ச்சியளிக்கும் யுனெஸ்கோ அறிக்கை!

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மானம்பாடி கோயில் சிதைப்பு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தூண்கள் இடிப்பால் கோயில் ஸ்திரத்தன்மைக்கே ஆபத்து என யுனெஸ்கோ தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

தமிழகத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோயில்களை யுனெஸ்கோ ஆய்வுசெய்து வருகிறது. யுனெஸ்கோ வெளியிட்டுள்ள ஜூலை மாத அறிக்கையில் தமிழ்நாடு அறநிலையத்துறை பல்வேறு விதிகளை மீறியுள்ளதாகவும், பல கோயில்கள் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. முதற்கட்டமாக பத்து கோயில்களை ஆய்வுசெய்த இக்குழுவினர், அதுகுறித்த விரிவான விளக்கங்களை நேற்று தெரிவித்திருந்தனர். அறநிலையத்துறையின் நிலை என்ன, அவர்கள் எப்படி கோயில்களைப் பராமரிக்கின்றனர் என்பது குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுனெஸ்கோ

இதில் மானம்பாடி நாகநாதசாமி கோயில் குறித்து யுனெஸ்கோ தந்துள்ள அறிக்கை அதிர்ச்சியளிக்கிறது. பதினோறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் எந்தவித முறையான காரணங்களும் இல்லாமல் இக்கோயில் இடிக்கப்பட்டிருக்கிறது. அறநிலையத்துறையின் தவறான அணுகுமுறையினால் மட்டுமே இக்கோயில் இடிக்கப்பட்டிருக்கிறது என யுனெஸ்கோ குறிப்பிட்டுள்ளது.

அதுபோல், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஸ்திரத்தன்மை குறித்தும் யுனெஸ்கோ கேள்வி எழுப்பியுள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரை குளத்தின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இருக்கும் தூண்கள் மாற்றியமைக்கப்பட்டதில் சிற்பசாஸ்திர விதியை பின்பற்றாததும் தெரியவந்துள்ளது. பழைய தூண்கள் இடிக்கப்பட்டுள்ளதால் கோயிலின் ஸ்திரத்தன்மைக்கே ஆபத்து என யுனெஸ்கோ அச்சம் தெரிவித்துள்ளது. மேலும், அறநிலையத்துறையின் தலைமை ஸ்தபதியான முத்தையாவிடமும் புனரமைப்புப் பணிகள் தொடர்பாக ஒப்புதல் பெறவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

யுனெஸ்கோவின் முதற்கட்ட அறிக்கையே பல்வேறு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், முழு அறிக்கையும் வந்தால் தான், புனரமைப்பு என்ற பெயரில் நடந்த கோயில் சிதைப்புகள் குறித்து முழுமையாகத் தெரியவரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!