"தமிழகத்தில் காவிரி, தாமிரபரணி உட்பட 7 நதிகள் மாசடைந்துள்ளன" - மத்திய அரசு

தமிழகத்தில் உள்ள ஆறுகளில் 7 ஆறுகள் மாசடைந்துள்ளதாக மக்களவையில் மத்திய அரசு  தெரிவித்துள்ளது.

மாசடைந்த நதி

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர், தமிழகத்தில் உள்ள ஆறுகளில் காவிரி, பவானி, பாலாறு, சரபங்கா, தாமிரபரணி, மணிமுத்தாறு, வசிஷ்டா ஆகிய 7 ஆறுகளும் மாசடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதேபோல், கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் மக்களவையில் சுற்றுச்சூழல் அமைச்சகம் மேற்கண்ட 7 நதிகளும் மாசடைந்ததாக அறிவித்தது. கடந்த வருடம், பேசிய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், நதியில் கழிவுகளைக் கலக்கும் ஆலைகள்மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் அந்த 7 நதிகளும் இன்னும் மாசடைந்த நிலையிலேயே காணப்படுகிறது. ஆறுகள் மணலாக காட்சியளிக்கும் இந்த நேரத்திலும் தமிழகத்தின் முக்கிய நதிகளாக விளங்கும் காவிரி, பாலாறு, தாமிரபரணி ஆகிய நதிகள் மாசடைந்து வருவது தமிழக அரசின் மெத்தனத்தைக் காட்டுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!