காவலர் தேர்வில் அலைக்கழிக்கப்பட்ட திருநங்கை! தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

காவல்துறைத் தேர்வில் திருநங்கை ஒருவர் அலைக்கழிக்கப்பட்டதாக வந்த புகாருக்குப் பதில் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 


பரமக்குடியைச் சேர்ந்த திருநங்கை ஜெகதீஸ்வரன். இவர் காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்து முதலில் நடந்த எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்வுக்கு வந்தார். உடற்தகுதி தேர்வுக்கு வந்தவரிடம் சான்றிதழ்கள் சரியாக இல்லை, சரியான சான்றிதழ்களை எடுத்து வரும்படி கூறியுள்ளனர். இரண்டு நாள் கழித்து மீண்டும் சான்றிதழ்களுடன் சென்றபோதும் அவர் நிராகரிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார் ஜெகதீஸ்வரன். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து வரும் ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!