Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறு கட்சிகளை இணைக்கும் அமித் ஷா! - தமிழக விசிட் அப்டேட்

பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் அமித் ஷா, வரும் 22-ம் தேதி தமிழகம் வருகிறார். ‘மூன்று நாள் சுற்றுப் பயணத்தில் கட்சியைப் பலப்படுத்தவும் சிறு கட்சிகளை இணைக்கவும் திட்டமிட்டிருக்கிறார்’ என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.

அமித் ஷா

மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததில் இருந்தே கொங்கு மண்டலத்தில் வாக்கு வங்கி உள்ள சிறு கட்சிகள், தலித் அமைப்புகள் உள்ளிட்டவைத் தொடர்ந்து பா.ஜ.க-வை ஆதரித்து வருகின்றன. இந்த அமைப்புகளை எல்லாம் பா.ஜ.க-வுக்குக் கீழ்க் கொண்டு வரும் வேலைகளில் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க மாநில நிர்வாகி ஒருவர், “கடந்தமுறை அமித் ஷா வருகை ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் பல்வேறு உள்கட்சி குழப்பங்கள் இருந்தன. இந்தமுறை அவரது பயணத் திட்டத்தில் மாற்றமில்லை. சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து பா.ஜ.க-வைப் பலப்படுத்தும் வேலைகளில் தீவிரம் செலுத்தத் தொடங்கியிருக்கிறோம்.

24-ம் தேதி அவர் கோவை வரும்போது புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியைச் சந்திக்க இருக்கிறார். இதையடுத்து, கொங்கு நாடு ஜனநாயகக் கட்சியின் தலைவர் நாகராஜ், தன்னுடையக் கட்சியை பா.ஜ.க-வில் இணைக்க இருக்கிறார். மாநிலம் முழுவதும் ஓரளவு செல்வாக்குடன் வலம் வரும் சிறு கட்சிகளையும் பா.ஜ.க-வில் இணைய இருக்கிறார்கள். இதன்மூலம் உள்ளாட்சித் தேர்தலில் அதிகமான இடங்களை பா.ஜ.க-வால் வெல்ல முடியும். புதிய உறுப்பினர் சேர்க்கை, மாவட்டங்களில் கட்சியைப் பலப்படுத்துவது, மாநில நிர்வாகிகளிடம் ஆலோசனை எனத் தொடர்ந்து விவாதிக்க இருக்கிறார் அமித் ஷா. அவரது தமிழக சுற்றுப்பயணம் நல்லபடியாக முடிய வேண்டும் என்ற கவலைதான் நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement