Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கழுதைகளின் மேல் பொருள் கொண்டு செல்ல உயர் நீதிமன்றம் தடை!

கழுதை சதுரகிரி

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில்,  மனிதன் வாழும் இடத்துக்கும் காட்டு விலங்கு வாழும் இடத்துக்கும் தட்ப வெட்ப நிலை எப்படி மாறுபடுமோ, அதைப்போலவே ஒவ்வொர் உயிரிகள் வாழும் இடத்துக்கு தகுந்தவாறு சூற்றுச்சூழல் அமைந்திருக்கும். முதலை இருவாழ் உயிரி என்றாலும் தண்ணீரில் வாழ்வது தான் அதற்குப் பாதுகாப்பு. இப்படிப் பல விசயங்கள் உயிரினங்களைப் பொருத்தவரை மாறும். இந்நிலையில் சதுரகிரி மலைப்பகுதியில் தீவிரவாதிகள் மற்றும் மாவோஸ்டுகள் நடமாட்டம் அதிகமாகிவருவதாக தகவல் வெளியானது. அந்த வனப்பகுதியில் உணவுப்பொருள்கள் மற்றும் ஆயுதங்களும் கொண்டு செல்லப்படுவதாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாயின.

அதைத் தொடர்ந்து கண்காணிக்க, உயரமான கண்காணிப்பு டவர் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. அதற்காக வீட்டு விலங்கான கழுதையை கட்டுமான பொருள்களைச் சுமைக்க வைக்க பயன்படுத்தப்படுகிறது. அவை சாம்பல் நிற அணில் சரணாலயங்கள் வழியாக செல்வதால் ஒரு விலங்குகளிடமிருந்து மற்ற விலங்குகளுக்கு எளிமையாக நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் கட்டுமான பொருள்களைக் கொண்டுசெல்ல கழுதையைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்'' என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கழுதை மட்டுமல்ல எந்த வீட்டு உயிரினத்தையும் வன உயிரின சரணாலய பகுதிக்குள் அனுமதிக்கக் கூடாது என இடைக்காலத் தடை விதித்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement