நண்பர்களுடன் இனி வீடியோவைப் பகிர்வது ரொம்ப ஈஸி! யூடியூப்பின் புதிய வசதி!

பிரபலமான வீடியோ தளமான யூடியூப்பில் ஒவ்வொரு நிமிடமும் 300 மணி நேரம் அளவிலான வீடியோக்கள் அப்லோடு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் சராசரியாக 500 கோடி வீடியோக்கள் இத்தளத்தில் கண்டுகளிக்கப்படுகின்றன. ஆனால், இதுவரை வீடியோவை மற்ற அப்ளிகேஷன்கள் வழியாகத்தான் நண்பர்களுடன் பகிரும் வசதி இருந்தது. தற்போது நேரடியாக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் வீடியோ குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் யூடியூப்பில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

யூடியூப்

கடந்த வருடம் முதலே இந்த வசதியை அந்நிறுவனம் டெஸ்ட் செய்துகொண்டிருந்தது. இந்நிலையில் நேற்றிலிருந்து அந்நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் அப்ளிகேஷனில் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. வீடியோவின் கீழ் உள்ள Share பட்டனை அழுத்தினால், விருப்பப்படும் யூடியூப் நண்பர்களுடன் நேரடியாக வீடியோவைப் பகிர்ந்துகொள்ள முடியும். மேலும், வீடியோ குறித்து வாட்ஸ்அப்பில் உள்ளதுபோல சாட் செய்யவும் முடியும்.

இந்த வசதி மொபைல் அப்ளிகேஷன்களில் மட்டும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. யூடியூப் பயனாளர்கள் அனைவருக்கும் விரைவில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மொபைல் அப்ளிகேஷனில் Shared டேப்பில், நண்பர்களுக்கு நாம் அனுப்பிய வீடியோ மற்றும் சாட் விவரங்களும் நண்பர்கள் நம்முடன் பகிர்ந்த விவரங்களும் இடம்பெறும். இந்தப் புதிய வசதியால் இனி வீடியோவைப் பகிர மற்ற அப்ளிகேஷன்களின் உதவியை நாட வேண்டிய அவசியம் இருக்காது என யூடியூப் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!