இலவச மின்சாரம் ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை..! அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடரும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 


விவசாயப் பயன்பாடுகளுக்குத் தமிழக அரசு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. இலவச மின்சாரம் விவசாயம் சார்ந்த பயன்பாடுகள் உள்ள இடங்களில் மின் மீட்டர் பொருத்தப்படாமல் இருந்துவருகிறது. இந்தநிலையில், விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கிடுவதற்கு மின் மோட்டார் பொருத்தும் பணிகளில் தமிழக அரசு இறங்கியது. அதனால், இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுகிறது என்ற எண்ணம் விவசாயிகள் மத்தியில் பரவியது. இதனால் அவர்கள் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விளக்கமளித்துள்ளார். அவர், 'இலவச மின்சாரம் ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை. மின்சார அளவீட்டைக் கணக்கிடுவதற்கே மின் மீட்டர் பொருத்தப்படுகிறது. விவசாயிகளின் மின் கட்டணத்தை அரசே செலுத்தும். இலவச மின்சாரம் தொடரும்' என்றார். இருப்பினும் உதய் மின் திட்டத்தின் காரணமாக தமிழக அரசு இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!