ஓவியா இப்போது எங்கே இருக்கிறார்? | Question arises over Oviya's place of existence

வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (08/08/2017)

கடைசி தொடர்பு:08:52 (09/08/2017)

ஓவியா இப்போது எங்கே இருக்கிறார்?

ஆரவ்வின் மருத்துவ முத்தம், பிக் பாஸ் வீட்டில் அனைவராலும் ட்ரிகர் செய்யப்பட்டது என்று கடுமையான மன உளைச்சலில் இருந்த போதும் ஓவியா, கெத்தாகவே பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். ஓவியாவின் எதிரி என்று சொல்லப்பட்ட காயத்ரியே, ‘‘ஓவியா எப்படி சார் இருக்கா?’’ என்று கமலிடம் கேட்கும் அளவுக்கு பிக் பாஸ் மூலம் அனைவரிடமும் நற்பெயரைச் சம்பாதித்து விட்டார் ஓவியா.

நடிகை ஓவியா

‘பிக் பாஸ்’ வீட்டிலிருந்து வெளியே வந்ததும், அப்பாவுக்கு ‘பை பை’ சொல்லிவிட்டு, விமானம் மூலம் கேரளாவுக்குக் கிளம்பிவிட்டாராம் ஓவியா. சினிமா நடிகைகளைப் பொறுத்தவரை, எல்லோருக்கும் உற்ற தோழி ஒருவர் இருக்கிறார். ஓவியாவின் உற்ற தோழி, ‘பீட்சா’, ‘சேதுபதி’ படங்களின் நாயகி ரம்யா நம்பீசன். மலையாள நடிகை துன்புறுத்தப்பட்ட போதும், ரம்யா நம்பீசன்தான் அவர்கூடவே இருந்து ஆறுதல் அளித்தார். இப்போது கடுமையான மன உளைச்சலில் இருக்கும் ஓவியாவும், ரம்யாவின் அரவணைப்பில்தான் இருக்கிறாராம்.

பிந்து மாதவியின் என்ட்ரியின்போது, ‘‘ஓவியா டார்லிங்... நீதான் பெஸ்ட். காயத்ரி ஒரு பச்சோந்தி’’ என்று காயத்ரிக்கு எதிராகவும்  ஓவியாவுக்கு ஆதரவாகவும் ட்வீட் செய்தவர் ரம்யா நம்பீசன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க