தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் இயக்குநர் பா.ரஞ்சித்  | director ranjith to attend untouchability conference in Madurai

வெளியிடப்பட்ட நேரம்: 23:56 (08/08/2017)

கடைசி தொடர்பு:10:06 (09/08/2017)

தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் இயக்குநர் பா.ரஞ்சித் 

மதுரையில், நவம்பர் மாதம் நடைபெற உள்ள தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில், இயக்குநர் பா.ரஞ்சித் பங்கேற்க உள்ளார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக, நவம்பர் மாதம் மதுரையில் நடத்தவுள்ள அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு மாநாட்டுக்கான வரவேற்புக்குழு அமைப்பதற்கான கூட்டம் மதுரையில் நடந்தது. இதில், மாநிலத்தலைவர் சம்பத், பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், அகில இந்தியச் செயலாளரும் முன்னாள் கேரள சபாநாயகர் ராதாகிருஷ்ணன், வி.சி.க. வன்னியரசு, எவிடென்ஸ் கதிர், ஆதித்தமிழர் கட்சி ஜக்கையன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.


தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தொடர் போராட்டங்களால்தான், ஆணவக் கொலைக்கு எதிரான புகார்களை விசாரிக்க காவல்துறையில் தனிப்பிரிவு மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது. இது, சிறிய வெற்றி என்றாலும், இது தமிழகம் முழுக்க நடைமுறைக்கு வரவேண்டும் என்றும், நவம்பர் மாதம் நடைபெறும் மாநாட்டில் இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நாடு முழுக்க உள்ள சாதி ஒழிப்புப் போராளிகள் கலந்துகொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் ஆணவக்கொலை, சாதி வெறிக்கு எதிராக, சேலத்திலிருந்து சென்னைக்கு நடைப்பயணம் சென்ற 62 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாநாட்டுக்கான பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க