வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (09/08/2017)

கடைசி தொடர்பு:09:50 (09/08/2017)

சென்னையில் துப்பாக்கி விற்க முயன்ற நான்குபேர் கைது!

சென்னையில், தனியார் விடுதியில் நான்கு பேர் துப்பாக்கி விற்க முயன்றபோது கைதுசெய்யப்பட்டனர்.

சென்னை வாலாஜா சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில், சில நபர்கள் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனைசெய்ய முயல்வதாக ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வுப் பிரிவு  போலீஸுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது, நான்கு பேர் துப்பாக்கிகளுடன் பிடிபட்டனர். 

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கோபிநாத், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த முருகன், மதுராந்தகத்தைச் சேர்ந்த குமார் மற்றும் பிரகாஷ் ஆகியோர் துப்பாக்கி விற்க முயன்றபோது, ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸ் டி.எஸ்.பி அஸ்லம், ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் நேற்றிரவு பிடித்துக் கைதுசெய்தனர்.
அவர்களிடமிருந்து 9 எம்எம்  பிஸ்டல் துப்பாக்கி, குண்டுகளுடன் பறிமுதல்செய்யப்பட்டது. கைதுசெய்யப்பட்டவர்களை தற்போது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்து விசாரணைசெய்துவருகிறார்கள்.