டெல்லியில் குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

லைநகர் டெல்லியில் குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

குற்றச்செயல்களின் சிறுவர்கள்

மக்கள் தொகை பெருகிவரும் தலைநகர் டெல்லியில், குற்றச்செயல்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துவருகிறது. அதிலும், குற்றச்செயல்களைச் செய்யும் சிறுவர்களின் எண்ணிக்கை மிகவும் உயர்ந்துவருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக, டெல்லி சிறுவர்கள் மீது 2,366 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. ஆனால், இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் 2,499 -ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, குற்றச்செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள் மீது பதிவுசெய்யப்பட்டிருக்கும் வழக்குகளில் 56 கொலை மற்றும் 83 கொலை முயற்சி வழக்குகளும் அடங்கும். 155 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், 382 திருட்டு வழக்குகளும் பதிவாகியிருக்கின்றன. வாகனத் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டதாகவும் கணிசமான சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வேலை தேடிவரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சிறுவர்கள் சரியான வேலை கிடைக்காததால், சிறு சிறு பிக்பாக்கெட் குற்றச் செயல்களில் ஈடுபடத் தொடங்கி, திருட்டு மற்றும் ஆள்கடத்தல், கொலைக் குற்றங்களைச் செய்யும் கும்பல்களுடன் இணைந்து, பிறகு பெரிய அளவிலான குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான சிறுவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!