Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டியூஷன் பீஸுக்கும் ஜிஎஸ்டி-யா? அதிர்ச்சியில் பெற்றோர்!

ந்திய மக்களைக் கடந்த சில மாதங்களாக அதிர்ச்சியில் தள்ளியது ஜிஎஸ்டி. ஹோட்டல், மால், ஜூவல்லரி என்று எங்கு சென்றாலும் பொருளின் விலைக்குக் கீழ் 3 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் வரை ஜி.எஸ்.டி. போட்டு பில்லை எகிற வைத்தனர். இனிமேல் ஹோட்டல் பக்கம் போலாமா? வேணாமா என்ற குழப்பத்தில் மக்கள் நகர்ந்து சென்றனர். வாங்கும் சம்பளத்தில் பெரும்பகுதியை ஜி.எஸ்.டியாகவே கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். 

இனிமேல் எல்லாமே நமக்கு நாமேதான். முடிந்த வரை ஆடம்பரச் செலவுகளை அடக்கி வைத்து அத்தியாவசியத் தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொள்ள மட்டுமே சாதாரண மக்களை பர்சும், ஜி.எஸ்.டி.யும் அனுமதித்துள்ளது. இந்தியா முழுக்கவும் ஒரே வரி என்ற கோஷம் சற்றே அடங்கியுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் புதிய பூதம் ஒன்று கிளம்பியுள்ளது. சாலை ஓரத்தில் இளநீர் விற்பவரில் தொடங்கி... முறைப்படுத்தப்படாத தொழில்களிலும் ஜி.எஸ்.டியை காரணம் காட்டி விலையை உயர்த்தி வருகின்றனர். 

இன்றைய வாழ்க்கை முறையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு டியூஷன் எனும் மாலை வகுப்பு இன்றியமையாததாகிவிட்டது. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் இடங்களில் குழந்தைகள் வீட்டுப் பாடங்களை முடிக்க மாலை நேர வகுப்புகள் இயங்குகின்றன. இந்த மாலை நேர வகுப்புகளுக்குப் பெற்றோர் அளிக்கும் தொகை பள்ளிக் கட்டணத்தை விட அதிகம். இதிலும் ஸ்டேட் போர்டு, மெட்ரிக், சி.பி.எஸ்.இ. எனப் பாடத்திட்டம் வாரியாக டியூஷன் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

பப்ளிக் எக்சாம் எழுதும் மாணவர்களுக்குப் பாட வாரியாக சிலபஸ் முடித்துக் கொடுக்க 25,000 ரூபாய் வரை மொத்தமாக டியூஷன் கட்டணம் பெறுகின்றனர். இதை ஈடுகட்ட முடியாமல் பெற்றோர் தவித்து வரும் நிலையில் டியூஷன் நடத்தும் ஆசிரியர்கள் தங்களது கட்டணத்தில் 18 சதவிகிதத்தை உயர்த்தி ஜி.எஸ்.டி. கேட்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement