’ஓ.என்.ஜி.சி சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவில்லை’ - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

மிழகத்தின் டெல்டா மாவட்டப் பகுதிகளில் எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகத் தகவலை வெளியிட்டுள்ளனர் சமூக ஆர்வலர்கள். 

ஓ.என்.ஜி.சி


நீதி மற்றும் பொறுப்பேற்புரிமைக்கான ஒருமைப்பாட்டுக் குழு இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தியது. இந்தச் சந்திப்பில், அண்மையில் எடுக்கப்பட்ட அறிவியல் ஆய்வு முடிவு ஒன்றையும் வெளியிட்டனர். அதில், ‘தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற டெல்டா மாவட்டப் பகுதிகளின் மண், நீர் ஆகியவை அறிவியல் பூர்வமான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அந்த அறிவியல் ஆய்வின் முடிவுகளின்படி சுற்றுச்சூழலை ஓ.என்.ஜி.சி நிறுவனம் பாதுகாக்கத் தவறியது நிரூபணமாகியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே எண்ணெய் எடுக்கப்படுவதாகக் கூறப்படுவது முற்றிலும் உண்மையில்லை. ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் செயல்பாடால், டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீரும் வேலூர் மாவட்டத்துக்கான நீர்க் கால்வாய்களும் அதிக அளவில் மாசடைந்துள்ளன. இதுதொடர்பான மூன்றாம் நபர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கிராம மக்களை விடுதலை செய்ய வேண்டுமென்றும் தவறு செய்த அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்’ என்றனர் விரிவாக. 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!