Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பேச்சுரிமையின் குரல்வளையை நெறிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: மு.க.ஸ்டாலின்

ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையின் குரல்வளையை நெறிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், ஒவ்வொருவரும் கருத்து தெரிவிக்கும் உரிமையுள்ள ஜனநாயகத்தில் சகிப்புத்தன்மையின்மைக்கு இடமில்லை. பேச்சுரிமையின் குரல்வளையை நெறிக்கும் வகையில் சென்னையில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் மீது தொடுக்கப்பட்டிருக்கும் சமூக வலைதளத் தாக்குதல் மிகுந்த வருத்தத்துக்கும் கண்டனத்துக்கும் உரியது. இதுபோன்ற அச்சுறுத்தல்களை விடுப்போருக்கு எதிராக, சட்டத்தின் ஆட்சி முறையாகப் பிரயோகிக்கப்பட்டு, தவறு செய்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்'' என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பெண் பத்திரிகையாளரை சமூக வலைதளங்கள் மூலம் அவதூறாகப் பேசியதாக விஜய் ரசிகர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement