Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இறால் பண்ணை ரசாயன கழிவு நீரால் இறந்து கரை ஒதுங்கும் மீன்கள்!

ராமநாதபுரம் அருகே உள்ள ஆற்றங்கரை பகுதியில் இறால் பண்ணை ரசாயன கழிவு நீர் கலப்பால் ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழந்து கரை ஒதுங்கியுள்ளது.

இறால்  பண்ணை கழிவு நீரால் இறந்து ஒதுங்கும் மீன்கள்


ராமநாதபுரம் மாவட்டத்தின் நீண்ட கடலோரப் பகுதியானது இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி வரும் நிலையில் அந்தக் கடற்பகுதியில் வாழும் உயிரினங்களின் அழிவுக்கு மூலக்காரணமாக உள்ளன. இம்மாவட்டத்தில் உள்ள இறால் பண்ணைகள். ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் உள்ளது. இங்கு வளர்க்கப்படும் இறால்கள் கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து , மலேசியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் வகையில் பெரிய அளவிலான இறால்களை உற்பத்தி செய்யும் வகையில் இந்தோனேசியாவில் இருந்து இறால் குஞ்சுகளும், அந்தக் குஞ்சுகள் குறைந்த காலத்தில் அதிக வளர்ச்சி அடைய தேவையான ரசாயன உணவுகளும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

 இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை பகுதியில் நதிப்பாலம் தொடங்கி தேவிப்பட்டினம் வரை சுமார் 200-க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் இறால் குஞ்சுகளின் கழிவுகள் அனைத்தும் இப்பகுதியில் உள்ள கடலோரப் பகுதிகளிலும், அவற்றின் அருகாமையில் அமைந்திருக்கக் கூடிய பிரேக் வாட்டர் பகுதியிலும் கலக்கும் வகையில் இறால் பண்ணைகள் அமைந்துள்ளன.


அதிக ரசாயனம் கலந்த இந்தக் கழிவு நீர் கடல் மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள பிரேக் வாட்டர் பகுதியில் கலப்பதால் இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரமாகத் திகழும் மீன் இனங்களும் மற்ற கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றன. இன்று ஆற்றங்கரை பகுதியில் குமுளா, ஓரா, சீலி, நெத்திலி போன்ற மீன் வகையினை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் கடற்கரை ஓரங்களில் ஒதுங்கியுள்ளன. இந்த மீன்களின் அழிவினால் இப்பகுதியில் கரை வலை மற்றும் நாட்டுப்படகு மூலம் மீன்பிடிக்கும் மீனவர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். எனவே இப்பகுதியில் உள்ள இறால் பண்ணைகளை ஆய்வு செய்து முறைப்படுத்துவதுடன் அவற்றின் மூலம் கடலில் கலக்கும் ரசாயன கழிவுகளைத் தடுத்து மீன் இனங்களைக் காக்க வேண்டும் என மீனவர்கள் கோரியுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close