வெளியிடப்பட்ட நேரம்: 20:53 (09/08/2017)

கடைசி தொடர்பு:08:51 (10/08/2017)

'சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான்!'- நடிகர் விஜய் திடீர் அறிக்கை

சில நாள்களுக்கு முன்னர் பெண் பத்திரிகையாளர் ஒருவர் விஜய் திரைப்படம் ஒன்றைப் பற்றி ட்விட்டரில் கூறிய கருத்துக்கு, விஜய் ரசிகர்கள் அந்தப் பெண் பத்திரிகையாளருக்கு எதிராக கருத்துகளைப் பதிவு செய்தனர். இந்நிலையில் விஜய், ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய்

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, 'சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான். யாருடைய திரைப்படத்தையும் யாரும் விமர்சிப்பதற்கு கருத்துச் சுதந்திரம் உண்டு. எக்காரணம் கொண்டும், எந்த நேரத்திலும் பெண்களை இழிவாகவோ தரக்குறைவாகவோ  விமர்சிக்கக் கூடாது என்பது எனது கருத்தாகும். அனைவரும் பெண்மையைப் போற்ற வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில், சமூக இணையதளங்களில் பெண்கள்மீது தவறான கருத்துகளை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.