Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பன்னீர்செல்வம் அணியின் போராட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்வது இதுதான்!

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு மாவட்ட வாரியாக நடத்தி வருகிறது. மதுரை, திருவண்ணாமலை, பெரம்பலூரைத் தொடர்ந்து நேற்று விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.

எடப்பாடி

விழாவில் பேசிய முதல்வர், ”தமிழகம் வளர்ச்சி கண்டு வரும் வேளையில் சிலர் அரசைப்பற்றி விமர்சனம் செய்துவருகின்றனர். அதை நிறுத்திவிட்டு மக்கள் நலப்பணிகளில் அவர்கள் அக்கறை கொள்ள வேண்டும். நாட்டில் பலர் நரியைப் போல சூழ்ச்சியில் ஈடுபடுகின்றனர். அவர்களது சூழ்ச்சி ஒருபோதும் வெற்றிபெறாது. அவர்களது சூழ்ச்சியை அ.தி.மு.க தொண்டர்கள் ஒரே அணியில் நின்று எதிர்கொள்வார்கள். விழுப்புரம் ரயில்வே மேம்பால பணி விரைவில் முடிக்கப்படும். அதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் தொடங்கப்பட்டுள்ள மகளிர் அறிவியல் கல்லூரிக்கு டாக்டர் எம்.ஜி.ஆர் கல்லூரி என பெயர் வைக்கப்படும். அதேபோல விழுப்புரத்தில் கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கத்துக்கும் டாக்டர் எம்.ஜி.ஆர் பெயர் வைக்கப்படும்.                       

எடப்பாடி

விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இதில் நாளொன்றுக்கு 100 மில்லியன் அளவுக்கு கடல்நீர் நன்னீராக்கப்படும். அதேபோல் விழுப்புரம் மாவாட்டத்தில் 198 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் செயலாக்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும்” என்று அறிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “கட்சியும் ஆட்சியும் எங்களிடம்தான் உள்ளது. பொதுமக்களும் அதை ஏற்றுக் கொண்டுள்ளனர். பொதுச் செயலாளர் பதவி குறித்த விசாரணை தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளதால் அதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது. பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருப்பது ஜனநாயக உரிமை” என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement