Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தமிழகத்துக்குத் தண்ணீர் தரவே மேகதாதுவில் அணை கட்டுகிறோம்!''- உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா தகவல்

தமிழகத்துக்குத் தண்ணீர் தரவே மேகதாதுவில் அணை கட்டுவதாக, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் உள்ள மேகதாது பகுதி

காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பின் மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவாராய், கன்வில்கர் அடங்கிய அமர்வு விசாரித்துவருகின்றனர். தமிழகம் சார்பாக நேற்று  நடந்த விவாதத்தின்போது, 'தமிழகத்தில் தண்ணீரைத் தேக்கிவைக்க ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புதிய அணைகள் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

''தமிழ்நாடு தாழ்வான இடத்தில் இருப்பதோடு, தட்டையான நிலப்பகுதியைக்கொண்டிருப்பதால்,  புதிய அணை கட்டிக்கொள்ளும் வசதி அமையவில்லை'' என்று தமிழக அரசின் வழக்கறிஞர் சேகர் நாப்டே பதில் அளித்தார். அப்போது குறுக்கிட்ட கர்நாடக அரசின் வழக்கறிஞர் பாலி நாரிமன், ''தமிழ்நாட்டின் எல்லையில்தான் மேகதாது உள்ளது. அதனால், அங்கு அணையை எழுப்பி தமிழகத்துக்கு குடிநீர் தரவே நாங்கள் முயலுகிறோம். ஆனால் தமிழகமோ, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது'' என்று கூறினார். 

இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ''நதிநீர்ப் பங்கீட்டுக்காக ஒரு ஒழுங்கு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால், தண்ணீருக்காகத் தொடர்ந்து சண்டைபோட்டுக்கொண்டே இருப்பீர்கள் '' என்றனர். 

இன்றும் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement