'முரசொலி' பவளவிழா தொடக்கம்..! கண்காட்சியைத் தொடக்கிவைத்தார், 'இந்து' என்.ராம்

'முரசொலி' பத்திரிகையின் காட்சி அரங்கத்தை, இந்து என்.ராம் தொடக்கிவைத்தார். 


தி.மு.க-வின் அதிகாரபூர்வ பத்திரிகையான 'முரசொலி'யின் 75-ம் ஆண்டு விழாக் கொண்டாட்டம் இன்று தொடங்குகிறது.  இரண்டு  நாள்கள் நடைபெற உள்ள இந்த விழாவில் பத்திரிகையாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். தி.மு.க தலைவர் கருணாநிதியால் முரசொலி நாளிதழ் தொடங்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவுபெறுகிறது. அதை முன்னிட்டு, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பவள விழாவுக்கு ஏற்பாடுசெய்துள்ளார்.

பவளவிழாவை முன்னிட்டு, கோடம்பாக்கம் சாலையிலுள்ள முரசொலி அலுவலக வளாகத்தில், அந்தப் பத்திரிகையின் காட்சி அரங்கத் தொடக்க விழா நடைபெற்றது. அந்த அரங்கத்தை இந்து என்.ராம் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தி.க தலைவர் கி.வீரமணி ஆகியோர் கலந்துகொண்டனர். இன்று மாலை கலைவாணர் அரங்கத்தில், முரசொலி பவளவிழா வாழ்த்தரங்கம் நடைபெற உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!