வெளியிடப்பட்ட நேரம்: 11:11 (10/08/2017)

கடைசி தொடர்பு:12:54 (10/08/2017)

பன்னீர்செல்வம் துணை முதல்வர்..? கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை

முதல்வரும் அ.தி.மு.க தலைமை நிலையச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் உட்பட, பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். டி.டி.வி.தினகரன், ஆகஸ்ட் 14-ம் தேதி மதுரையில் பொதுக்கூட்டத்தில் பேச இருக்கும் நிலையில், இந்தக் கூட்டம் அரசியல் முக்கியத்துவம்பெற்றுள்ளது. 

பன்னீர்செல்வம்

அ.தி.மு.க-வில் பிரிந்துகிடக்கும் அணிகளை ஒன்றிணைக்கும் வேலைகளை வேகப்படுத்துவது, அதற்காக வழிகாட்டுதல் குழு அமைப்பது போன்றவை பற்றி இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்த இருக்கிறார்கள். வரும் 15-ம் தேதிக்குள், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று எடப்பாடி அணியில் சிலர் வலியுத்திவருகிறார்கள். துணை முதல்வர் பதவியும் கட்சியின் பொருளாளர் பதவியும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொடுக்கலாம் என்ற திட்டமும் எடப்பாடி அணிக்கு உள்ளது.

edappadi palanisamy
 

இதுகுறித்து, பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி கூறுகையில், ''இணைப்புக்கு நாங்கள் ரெடியாகவே இருக்கிறோம். தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கெனவே சொன்னபடி, அவரது நிபந்தனைகளை எடப்பாடி பழனிசாமி அணி ஏற்க வேண்டும்'' என்றார்.
 

edappadi palanisamy

நீங்க எப்படி பீல் பண்றீங்க