தமிழர் மரணம்... மன்னிப்புக் கேட்ட கேரள முதல்வர்

நெல்லையைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு சிகிச்சையளிக்க கேரள மருத்துவமனைகள் மறுத்த விவகாரம் தொடர்பாக, மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பகிரங்க மன்னிப்புக் கோரினார். 


நெல்லை சமூகரெங்கபுரத்தை அடுத்த மேலூர் பகுதியைச் சேர்ந்தவர், முருகன். இவர், கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பால் வியாபாரம் செய்துவந்துள்ளார். அந்தப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்து ஒன்றில் சிக்கிய முருகனுக்கு, மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். இதனால் பல மணிநேரம் அலைக்கழிக்கப்பட்ட முருகனின் உயிர் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பிரிந்தது. இந்த விவகாரம்குறித்து விளக்கமளிக்க, கொல்லம் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏழு மருத்துவமனைகளுக்கு கேரள மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

இந்த நிலையில், 'தமிழர் ஒருவருக்கு மருத்துவம் பார்க்க மறுத்ததால், அவர் உயிர் பிரிந்தது கேரள மாநிலத்துக்கே அவமானம்' என்று முதலமைச்சர் பினராயி விஜயன் சட்டப்பேரவையில் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார். இதுதொடர்பாக, உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!