ஹோட்டலில் சர்வர் உடையணிந்து பந்தாவாகப் பரிமாறும் குரங்கு! (வீடியோ) 

உலகில், சில வித்தியாசமான ஹோட்டல்கள் இருக்கின்றன. எல்லா ஹோட்டல்களிலும் மனிதர்கள்தான் வேலைசெய்வார்கள். ஆனால், ஜப்பானில் உள்ள கயாபுகி எனும் ஹோட்டலில் மட்டும் வித்தியாசமாக ஒரு குரங்கை வேலைக்காக வைத்திருக்கிறார்கள். 

குரங்கு,

குரங்குகளைப் பராமரித்து வந்த இதன் உரிமையாளர், ஒருநாள் எதேச்சையாக ஒரு வாடிக்கையாளருக்கு எந்த ஒரு உத்தரவும் இல்லாமல் தானாகவே உணவைக் கொண்டுபோய் டேபிளில் வைப்பதைக் கவனித்தார். அதன்பிறகு, இந்தக் குரங்குக்கு சர்வர் உடையை அணிவித்து, ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு பந்தாவாக சர்வர் வேலை செய்யவைத்தனர். தினமும் ஹோட்டலில் சர்வர் வேலைசெய்து, வலம் வந்துகொண்டிருக்கும் இந்தக் குரங்கு, ஜப்பானில் மிகவும் பிரபலம். இதன் பரிமாறும் அழகைப் பார்க்கவே கூட்டம் கூடுகிறது. இதை, உள்ளூரிலிருந்து மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் வந்து பார்த்துச் செல்கின்றனர். இதனால், முன்பு இருந்ததைவிட வாடிக்கையாளர்கள் கூட்டம் இப்போது அதிகரித்துள்ளது என்கிறார், இந்த ஹோட்டலின் உரிமையாளர். 

 இந்தக் குரங்கு பந்தாவாகப் பரிமாறும் அழகைக் கீழே உள்ள வீடியோவில் காணலாம்... 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!