Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு மழைக்கே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம்... அந்தரத்தில் தொங்கிய அரசு பேருந்து !

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள  ஆர்.எஸ் மாத்தூர் செல்லும் சாலையில் தோப்பேரி என்ற இடத்தில் புதிதாக சாலை அமைக்கப்பட்டு வருகின்றது. இதில் நின்னியூர் ஓடையில் புதிய பாலம் அமைப்பதற்காக சாலையின் ஓரத்தில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டது.


இந்நிலையில் செந்துறை பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதை அறியாமல் வங்காரத்தில் இருந்து அரியலூருக்கு 30 பயணிகளுடன் வந்த அரசு பேருந்து ஓடை பாலத்தில் சிக்கி அந்தரத்தில் தொங்கியது. உடனே பயணிகள் கீழே இறக்கப்பட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் செந்துறை அரசு மருத்துவமணைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிக்சை அளிக்கப்பட்டு வீட்டிற்க்கு அனுப்பப்பட்டனர்.டிரைவர்க்கு பலத்த காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக அரியலூர் தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால் செந்துறை - பென்னாடம் இடையிலான சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.


அனைத்து கட்சி கூட்டமைப்பின் தலைவர் ஞான மூர்த்தி பேசுகையில் ”இந்த விபத்துக்கு காரணம் அதிமுக அரசு தான். ஒரு மழைக்கே அரசு பேருந்து அந்தரத்தில் தொங்குகிறது என்றால் எவ்வளவு கேவலமான நிலைக்கு தள்ளபட்டிருக்கிறது இந்த அரசு.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் 2013ம் ஆண்டு செந்துறை,கோட்டைக்காடு - பெண்ணாடம் 22 கிலோ மீட்டர் சாலைகள் தரம் உயர்தப்படும் என்று அறிவித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாமல் இந்த திட்டம் கிடப்பில் கிடந்தது பின்பு நாங்கள் போராட்டம் நடத்தியபிறகு 2015ல் டெண்டர் விட்டு வேலையை தொடங்கினார்கள். அதுவும் செந்துறை -இலைக்கடம்பூர்  2 கிலோமீட்டர் சாலையை இரண்டு வருடமாக போட்டுகொண்டிருக்கிறார்கள். இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிறது இன்னும்  50 சதவீதம்கூட வேலை முடிக்கபடவில்லை. 
 

 
இதை எதிர்த்து கடந்த மாதம் அனைத்துகட்சி சார்பில் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். அப்போது அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் 30-7-2017 க்குள் போட்டு முடித்து விடுவோம் என உறுதியளித்தார்கள் ஆனால் இதுவரையிலும் சாலை போடவில்லை நேற்று பெய்த மழையில் இலைக்கடம்பூர் ஓடையில் பாலம் அடித்து செல்லபட்டுள்ளது.நாங்கள் போராட்டம் நடத்திய போதே இந்த அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்குமா ? இல்லை இந்த விபத்தில் உயிர்சேதம் ஏற்பட்டிருந்தால் யார் பொருப்பேற்பது. இந்த அரசின் அலட்சியத்தால் இன்னும் என்னென்ன நடக்க போகிறதோ தெரியவில்லை” என்று முடித்தார்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement