வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (10/08/2017)

கடைசி தொடர்பு:16:00 (10/08/2017)

கேரளாவில் இறந்த முருகன் உடலைக் கொண்டுவர பணமில்லாமல் தவித்த மனைவி!

கேரளாவில், விபத்தில் சிக்கி பலியான முருகனின் உடலை ஊருக்குக் கொண்டுவரக்கூட பணமில்லாமல், அவரின் மனைவி தவித்துள்ளார்.

கதறி அழும் முருகனின் மனைவி

PHOTO COURTESY : MATHRUBHUMI

நெல்லை மாவட்டம் சமூகரங்கபுரத்தைச் சேர்ந்த முருகன், கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் கூலி வேலைபார்த்துவந்தார். இரு நாட்களுக்கு முன், கொல்லம் அருகே விபத்தில் சிக்கிய முருகனுக்கு, தனியார் மருத்துவமனைகள் சிகிச்சையளிக்க மறுத்தன. இரவு 11 மணியளவில் விபத்தில் சிக்கிய முருகன், காலை வரை சிகிச்சை கிடைக்காததால் பரிதாபமாக இறந்துபோனார். 

தகவல் கிடைத்ததும் பதறியடித்தபடி அவரின் மனைவி பாப்பா மற்றும் குடும்பத்தினர் கொல்லம் சென்றுள்ளனர். முருகனின் உடல், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்ததால், அங்கு சென்றனர். அவர்களிடத்தில் காருக்கு வாடகை கொடுக்கப்  பணம் இல்லாத நிலை. முருகனின் உடலைப் பார்த்து, மனைவியும் இரு குழந்தைகளும் கதறி அழுதது சுற்றியிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

முருகனின் குடும்பத்தினர் நிலையறிந்து, திருவனந்தபுரம் மாவட்டம் சி.பி.எம். கட்சி ரூ. 10 ஆயிரம் வழங்கியது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரூ.10 ஆயிரம் வழங்கினர். முருகனின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுசெல்ல வாகன வசதியும் ஏற்படுத்திக் கொடுத்தனர். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க