சுகேஷ் ஜாமீன் மனு... டெல்லி போலீஸுக்கு நோட்டீஸ்

இரட்டை இலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு தொடர்பாகப் பதிலளிக்குமாறு, டெல்லி போலீஸாருக்கு மாநில உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.


இரட்டை இலை சின்னத்தை மீட்க, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி. தினகரன் மற்றும் இடைத்தரகராகச் செயல்பட்டதாக சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரை டெல்லி போலீஸார் ஏப்ரல் 16-ல் கைதுசெய்தனர். இதில், டி.டி.வி. தினகரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் ஒருமுறையும், விசாரணை நீதிமன்றம் இரண்டு முறையும் நிராகரித்தன. இதையடுத்து, 4-வது முறையாக ஜாமீன் கோரி  டெல்லி உயர் நீதிமன்றத்தில் சுகேஷ் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசுடோஷ் குமார், ஜாமீன் மனு மீதான பதில் மனு மற்றும் விசாரணை நிலவரம் ஆகியவற்றை தாக்கல்செய்ய டெல்லி போலீஸாருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். சுகேஷின் வீட்டிலிருந்து போலி நாடாளுமன்ற எம்.பி. அடையாள அட்டை கைப்பற்றப்பட்டதாகவும், இது நாடாளுமன்ற பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் கூறி, டெல்லி போலீஸார் ஜாமீன் கொடுக்க எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!