வெளியிடப்பட்ட நேரம்: 16:57 (10/08/2017)

கடைசி தொடர்பு:16:57 (10/08/2017)

ஓவியாவின் வருகைக்கு காத்திருந்த ரசிகர்கள்..! - ஷாக் கொடுத்த ஓவியா

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ-வில் ஓவியா தொடர வேண்டும் என்று தருமபுரியைச் சேர்ந்த சில ரசிகர்கள் அகில இந்திய ஓவியா பேரவையைத் தொடங்கி, ஓவியாவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் எனப் பிரசாரம் செய்தார்கள். அவர்களைப் பார்க்க ஓவியா தருமபுரி வருவதாக காட்டுத் தீ போல ஒரு செய்தி பரவியது. அதனால் ரசிகர்களும்  இரண்டு நாள்கள் காத்திருந்தார்கள். தற்போது, ஓவியா வராததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.

இதுபற்றி அகில இந்திய ஓவியா பேரவையின் தலைவர் தமிழ், ''பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா இருந்தபோது, அவருக்கு ஆதரவாக நாங்கள் தருமபுரி மாவட்டம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டோம். அது, அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தது. ஓவியா பிக் பாஸ் ஷோவிலிருந்து வெளியே வந்ததும் அந்தப் பதிவுகளைப் பார்த்ததாகவும், நாளை (09.08.2017) தருமபுரிக்கு நேரில் வந்து உங்களைச் சந்திக்க இருக்கிறார் என்றும் அவருடைய உதவியாளர் நேற்று முன் தினம் (08.08.2017) எனக்கு போன் பண்ணினார். நேற்றும் (09.08.2017) ஓவியா வருவதாக என்னிடம் சொன்னார். எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல, என்ன செய்வதென்றே தெரியவில்லை. இரவோடு இரவாக என் நண்பர்களையும் ஓவியாவின் ரசிகர்களையும் அழைத்து, மாலைக்கும் ஃப்ளக்‌ஸ் பேனர்களுக்கும் ஆர்டர் கொடுத்தோம். ஓவியா மன அழுத்தம் தீர வேண்டும் என்பதற்காக விநாயகருக்கு பூஜைசெய்ய, 500 குழந்தைகளுக்கு அன்னதானம் கொடுப்பதற்காக பிரியாணியும் ரெடி பண்ணினோம். ஆனால், அவர் நேற்று (09.08.2017) வரவில்லை.

நேற்று மாலை என்னிடம் மீண்டும் உதவியாளர் பேசி, இன்று (10.08.2017) பிற்பகல் 12 மணிக்கு வருவதாக உறுதியளித்தார். இன்றும் அதே போல ஏற்பாடுகள்செய்து காத்திருந்தோம். இன்றும் வரவில்லை. அதனால், மிகுந்த ஏமாற்றம் அடைந்தோம். ஏதோ காரணத்தால்தான் வரவில்லை என்பதை உணர்ந்திருக்கிறோம். நிச்சயம் அவர் எங்களைப் பார்க்க வருவார் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து ஓவியா பெயரில் நற்பணிகளைத் தொடருவோம்’’ என்றார். 

தருமபுரி அகில இந்திய ஓவியா பேரவையினர் ஓவியாவை தொடர்புக் கொண்டு பேசிய ஆடியோ பதிவு கீழே இருக்கிறது. 

 

 

...