Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீட் தேர்வுக்கு எதிராக ம.தி.மு.க சார்பில் போராட்டம்..! வைகோ கைது

தமிழகத்துக்கு நீட் தேர்வைக் கொண்டு வருவதற்கு மத்திய அரசுக்குத் தகுதியும் இல்லை; உரிமையும் இல்லை என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 


நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் ம.தி.மு.க சார்பில் போராட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே இந்தப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இருப்பினும் தடையை மீறி வைகோ தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில், நீட் தேர்வுக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 'தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் உலகப் புகழ்பெற்ற மருத்துவர்களாக இருந்துவருகின்றனர். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இரண்டு சதவீத மாணவர்களே படிக்கின்றனர்.

மீதி மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தில் படிக்கின்றனர். எனவே மத்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். நீட் தேர்வு முறையால் மருத்துவம், வசதி படைத்தவர்களுக்குக் கிடைக்கும் என்ற சூழல் உள்ளது. அது ஏழை மாணவர்களுக்கு எட்டாக் கனியாக மாறிவிடும். சுகாதாரத்துறை அமைச்சர் இரண்டு நாளில் தீர்வு கிடைத்துவிடும் என்று தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலின்போதே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.

மத்திய அரசின் அழுத்தத்துக்கு தமிழக அரசு பணிந்துவிடக் கூடாது. தமிழக உரிமைகளை மத்திய அரசு நசுக்கப்பார்க்கிறது. தமிழகத்துக்கு நீட் தேர்வைக் கொண்டு வருவதற்கு மத்திய அரசுக்கு எந்தத் தகுதியும் இல்லை; உரிமையும் இல்லை' என்றார். பின்னர், போராட்டத்தில் வைகோ, மல்லை சத்யா உள்பட 300-க்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினர் கைது செய்தனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement