Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜிஎஸ்டி-யில் தெளிவு இல்லை... வேலைநிறுத்தம் செய்ய ரயில்வே ஒப்பந்தக்காரர்கள் முடிவு 

ஜிஎஸ்டி-யில் தெளிவு இல்லை மற்றும் அதிக ஜிஎஸ்டி வரிக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில்வே ஒப்பந்தக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர். 

ரயில்வே, rail

ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வாட் வரி 1 சதவிகிதம் குறைவாகவும், உத்தரப் பிரதேசத்தில் 4 சதவிகிதத்திற்கும் குறைவாகவும் இருக்கிறது. ஆனால், ஆகஸ்ட் 5-ம் தேதி ஜி.எஸ்.டி கவுன்சில், பழைய மற்றும் புதிய ஒப்பந்தங்களுக்கு 12 சதவிகிதமாக ஜி.எஸ்.டி விகிதங்களை நிர்ணயித்துள்ளது. இது ஒப்பந்தக்காரர்களை மோசமாகப் பாதிக்கும். இதுமட்டுமின்றி பழைய ரயில்வே ஒப்பந்தங்களுக்கு ஜி.எஸ்.டி எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது பற்றிய தெளிவு இல்லை. இந்தக் குழப்பத்தின் காரணமாக ஜூலை 1-ம் தேதி முதல் ஒப்பந்தக்காரர்கள் வர வேண்டிய பணம் எதுவும் வரவில்லை. பழைய ரயில்வே ஒப்பந்தங்களில் அதிக ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளதால் எங்களுடைய வியாபாரம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில்வே ஒப்பந்தக்காரர்கள் குழு வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக முடிவு செய்துள்ளனர். 

இது குறித்து இந்திய ரயில்வே உள்கட்டமைப்பு வழங்குநர்கள் சங்கத்தின் (Indian Railway Infrastructure Providers Association) தேசிய துணைத் தலைவர், அசோக் குமார் பாத் கூறுகையில்,"சமீபத்தில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவைச் சந்தித்து அதிக ஜி.எஸ்.டி வரி மற்றும் ரயில்வே ஒப்பந்தங்களில் ஜி.எஸ்.டி வரி நடைமுறையில் தெளிவு இல்லை, இதற்கு ஒரு தீர்வினைக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், அவரிடம் சொன்னதில் எந்தப் பயனும் இல்லை. இதனால் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்" என்றார் அவர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement