Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு குடத்துக்கு 20 நிமிடம்! - ஊற்று நீரைக் குடிநீராக்கிய மக்கள்

விருதுநகர் மாவட்டம் குண்டாற்றைச் சுற்றியுள்ள கிராம மக்கள் குடிதண்ணீர் ஆதாரம் இல்லாததால் இந்த ஆற்றைச் சுற்றி குழிதோண்டி, அக்குழிகளில் ஊறும் நீரை அகப்பை மூலம் சேகரித்து குடிதண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றனர். 

fountain water

தமிழகத்தில் தற்போது நிலவிவரும் பிரச்னைகளில் தண்ணீர் பிரச்னைதான் உச்சத்தில் உள்ளது. எல்லா மாவட்டங்களிலும் ஆறுகள், குளங்கள், கண்மாய்கள் தண்ணீர் இன்றி வற்றிவிட்டன. மழையும் பெய்யாமல் வறட்சியால் அணைகளிலும் நீர் மட்டம் அடிவாரத்தை தொட்டுவிட்டது. பல அணைகள் தண்ணீர் பற்றாக்குறையால் திணறி வருகின்றன. 

விருதுநகர் மாவட்ட முடிவுப்பகுதியிலுள்ள குண்டாற்றுக் கரையைச் சுற்றியுள்ள தாமரைபுரம், முத்துராமலிங்கபுரம், முத்துராமலிங்கபுதூர் மற்றும் பூமாலைப்பட்டி உள்ளிட்ட சில கிராமங்களில் குடிநீர் ஆதாரத்திற்காக ஊராட்சி சார்பில் பல இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு மின்மோட்டார்கள் மூலம் எடுக்கப்பட்டு வழங்கப்படும் தண்ணீர் அதிக உப்புத்தன்மையான நீராக இருப்பதால் இதைக் குளிக்கவும் துணி துவைக்கவும் பாத்திரம் கழுவவும் பயன்படுத்தி வருகிறார்கள். 

fountain water 1

இந்தக் கிராமங்களிலுள்ள சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குக் குடிநீர் தேவைக்கான ஒரே நீர் ஆதாரம் குண்டாற்றைச் சுற்றியுள்ள நீர் ஊற்றுகள்தான். இந்த ஊற்றுகளும் இயற்கையாக உருவாகி நீர் ஊறுவதில்லை. இக்கிராம மக்கள் மண்வெட்டிகளைக் கொண்டு 10 அடி ஆழம் வரை குழிதோண்டி அதில் சிறுகச்சிறுக ஊறும் தண்ணீரைத் தேங்காய் சிரட்டை அகப்பையைக்கொண்டு தண்ணீரைக் கலக்கிவிடாமல் தெளிந்த நீரை எடுத்து குடங்களில் சேகரித்து குடிநீராகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இப்படி ஊறும் தண்ணீரை அகப்பையில் எடுத்து ஒரு குடத்தை நிரப்ப 20 நிமிடம் வரை ஆகும் என்கின்றனர் ஊர் மக்கள். 

ஊற்றில் தண்ணீர் சேகரித்துக்கொண்டிருந்த மாரியம்மாள், ''இந்தப் பகுதி கிராம மக்களுக்கு குடிநீர் ஆதாரமே இந்த ஊத்துதான். ஏதோ புண்ணியத்துல இந்த மணல்குழி ஊத்துல இருந்து தண்ணீர் கிடைச்சுட்டு இருக்கு. அதுலயும் இந்தப் பகுதிகளில் மணல் குவாரி அமைக்கக் கூடாதுன்னு கலெக்டரிமும் நீதிமன்றத்துலயும் மனு கொடுத்திருக்கோம். பெண்கள் மட்டுமல்லாமல் ஸ்கூலுக்குப் போயிட்டு வந்ததும் எங்க பிள்ளைகளும் கையில் காலிக் குடத்தையும் அகப்பையையும் எடுத்துக்கிட்டு ஊற்றுத் தண்ணீர் எடுக்க வந்துவிடுவாங்க. பகலில் நாங்க தண்ணீர் எடுப்போம். இரவில் வீட்டு ஆம்பளைகளும் தண்ணி எடுக்க வருவாங்க’’ என்றார் இயல்பாக.    

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close