தமிழக மீனவர்களுக்கு ஆகஸ்ட் 23 வரை காவல்! | SL court sent TN fishermen to judicial custody

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (10/08/2017)

கடைசி தொடர்பு:16:40 (10/08/2017)

தமிழக மீனவர்களுக்கு ஆகஸ்ட் 23 வரை காவல்!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை ஆகஸ்ட் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஊர்க்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. 


நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கைக் கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்தனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நாகதாஸ்க்கு சொந்தமான படகில் சென்ற ராஜா, களஞ்சியராஜ், சோலை, காமராஜ் ஆகியோரையும்,  பாண்டி என்பவருக்குச் சொந்தமான படகில் அவருடன் சென்ற ஆரோக்கிய அந்தோனி, தாசன், செல்லையா ஆகியோரையும், ராமு என்பவரது படகில் அவருடன் சென்ற கார்மேகம், பலவேசம், முனியாண்டி ஆகிய 12 பேரையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்தனர். அவர்களின் விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். கைது செய்யப்பட்டவர்கள் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஆகஸ்ட் 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். மேலும், அவர்களது 9 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.


[X] Close

[X] Close